தமிழகம்

வாக்காளர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி: மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கிவைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை மாவட்ட தேர்தல் நிர்வா கம் சார்பில் வாக்காளர் விழிப்பு ணர்வு மோட்டார் சைக்கில் பேரணி நேற்று நடைபெற்றது. அப்பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் தொடங்கிவைத்தார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வாக்குப் பதிவை 100 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் ஹார்வெஸ்ட் விஷன் பவுண்டேஷன் தொண்டு நிறு வனம் ஆகியவை இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தியது. ரிப்பன் மாளிகை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் பங்கேற்று, பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வாக்காளர் அனைவரும் வாக்க ளித்து வாக்குப் பதிவை 100 சதவீதமாக உயர்த்துவது தொடர் பாக பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெறுகிறது. இதில் 30 மோட்டார் சைக்கிள்களில் 50 தன்னார்வலர்கள், 20 மோட் டார் சைக்கிளில் மாநகராட்சி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 100 சதவீதம் வாக்களி யுங்கள் என்ற விழிப்புணர்வு கையுறை மற்றும் ஆடைகளை அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத் தினர். வழி நெடுகிலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங் களையும் பொதுமக்களுக்கு வழங்குகின்றனர். இந்த பேரணி, ரிப்பன் மாளிகையில் தொடங்கி, தலைமைச் செயலகம், மெரினா கடற்கரை, அடையாறு, ஆளுநர் மாளிகை, கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணா வளைவு, எழும்பூர் ரயில் நிலையம் வழியாக மீண்டும் ரிப்பன் மாளிகையை வந்தடைகின்றனர்.

கடந்த தேர்தலில் சென்னையில் 10 சதவீத வாக்குச் சாவடிகளில் குறைந்த அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. இப்பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக தினமும் கட்டுப்பாட்டு அறைக்கு 15 முதல் 20 புகார்கள் வருகின்றன. அதன் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மு.ஆசியா மரியம், ஹார்வெஸ்ட் விஷன் பவுன்டேஷன் நிறுவனத்தை சேர்ந்த டாடி ஜோ ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர், மோட்டார் சைக்கிள் பேரணி, 20 கிலோ மீட்டர் வேகத்தில் 40 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று ரிப்பன் மாளிகையை அடைந்தது.

SCROLL FOR NEXT