தமிழகம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் 115 பதவிகளில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் வெற்றி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 115 பதவிகளில் விஜய் மக்கள் இயக்க ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்தஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முதலாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் குறிப்பிடத்தகுந்த அளவில் வேட்பாளர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:

தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஆதரவுடன் கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் என்.பி.எஸ்.சாவித்திரி லோகநாதன் என்பவர், விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியம், எறையூர் ஊராட்சி மன்றத் தலைவியாக வெற்றி பெற்றுள்ளார் என்றார்.

SCROLL FOR NEXT