மதுரை தோப்பூர் அரசு காச நோய் மருத்துவமனையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் புற நோயாளிகள் சிகிச்சைப்பிரிவு தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி ஒப்புதல் வழங்கி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது. மதுரையுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட பல இடங்களில் மருத்துவமனை செயல்பட தொடங்கியுள்ளன.
சில இடங்களில் எம்பிபிஎஸ் வகுப்புகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.
கட்டுமானப் பணி முடியா விட்டாலும் தெலங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஆந்திரா, உத்தரபிரதேசம்ஆகிய மாநிலங்களில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு வேறு கட்டிடங்களில் நடக்கின்றன.
ஆனால் மதுரையில் மட்டும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதோடு எய்ம்ஸ் மருத்து வமனை திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இதுவரை எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் மதுரை எய் ம்ஸ் மருத்துவமனைக்கான புற நோயாளிகள் சிகிச்சைப் பிரி வை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியதாவது:
‘‘மதுரை எய்ம்ஸ் மருத்து வமனை புறநோயாளிகள் சிகிச் சைப் பிரிவை தோப்பூரில் தொடங்குவதற்கு மத்திய அரசு ஆலோசனை செய்வதாக தெரி கிறது, இது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்க வேண்டும், அது நடந்தால் நல்லது.
கல்லூரி மாணவர் சேர்க்கை சிவகங்கை, தேனியில் தொடங் கப்பட வாய்ப்புள்ளது. தொடர்ந்து மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தொடங்கவும் வலி யுறுத்துவோம்,’’ என்றார்.