தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றித்தடம் பதித்த தம்பதிகள்

செய்திப்பிரிவு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் திமுகவைச் சேர்ந்த தம்பதிகள் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பல சுவாரசியமான வெற்றி, தோல்வி குறித்த முடிவுகளும் வெளியாகியுள்ளன.

அதில், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுகவைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் ஒரே ஒன்றியத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சியின் 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் மு.பாபு போட்டியிட்டு சுமார் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

இவர் மாவட்ட ஊராட்சியின் தலைவராகும் வாய்ப்புள்ளவர் என கூறப்படுகிறது. இவரது மனைவி பிரேமலதா பாபு என்பவர் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தின் 26-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு சுமார் 2,100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல், ராணிப் பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்குதிமுக சார்பில் பெ.வடிவேல் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

இவரது மனைவி பவானி, நெமிலி ஒன்றியத்துக்கு உட்பட்ட சயனபுரம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஏற்கெனவே போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இதன்மூலம் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தம்பதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT