புதுக்கோட்டையில் சோதனை நடந்த வனத்தோட்டக் கழகத்தின் மண்டல மேலாளர் நேசமணியின் வீடு. 
தமிழகம்

வனத்தோட்ட மண்டல மேலாளர் வீட்டில் சோதனை: ரூ.3 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை வனத்தோட்டக் கழகத்தின் மண்டல மேலாளர் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டை வனத்தோட்டக் கழகத்தின் மண்டல மேலாளர் நேசமணி. புதுக்கோட்டையைச் சேர்ந்தவரான இவர், அறந்தாங்கி, காரைக்குடி மற்றும் உளுந்தூர்பேட்டை (திருக்கோவிலூர்) ஆகிய வனத்தோட்டக் கழகங்களின் மண்டல மேலாளர் பொறுப்புகளையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

இந்நிலையில், உளுந்தூர்பேட்டையில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத ரூ.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், புதுக்கோட்டையில் உள்ள நேசமணியின் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் நேற்று அதிரடி சோதனை செய்தனர்.

காலையில் இருந்து இரவு வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.41 ஆயிரம் மற்றும் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT