வெற்றி பெற்ற சான்றிதழ்களுடன் டேனியல், எபினேசர். 
தமிழகம்

மாற்றுத் திறனாளி கணவன், மனைவி வார்டு உறுப்பினர்களாக தேர்வு

செய்திப்பிரிவு

வண்டலூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மாற்றுத்திறனாளி கணவன், மனைவி வெற்றி பெற்றுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் ஊராட்சி 12-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 10 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 953 வாக்குகள் பதிவாகின. இதில் டேனியல் 193 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதேபோல் 13வது வார்டு உறுப்பினராக அவரது மனைவி எபினேசர் உள்ளிட்ட 2 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 610 வாக்குகள் பதிவாகின. இதில் 247 வாக்குகள் பெற்று அவர் பெற்றி பெற்றார். கணவன் மனைவி இருவரும் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் கரோனா காலகட்டத்தில் ஏழை எளியோருக்கு தினமும் இலவசமாக மதிய உணவுகளை வழங்கி வந்துள்ளனர்.

எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு அவர்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் நடந்துகொள்வோம். மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக கிடைக்க செய்வோம் என்றனர்.

SCROLL FOR NEXT