புதுச்சேரி தேர்தல் களத்தில் அதி முகவும் ஆளும் என்.ஆர்.காங் கிரஸுக்கும் கூட்டணி ஏற்படுவதற் கான வாய்ப்புகள் மங்கி வருகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்த லில் புதுச்சேரியில் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 15, அதிமுக 5 இடங் களில் வெற்றி பெற்றன. கூட்டணி அமைச்சரவை அமையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், காரைக்கால் சுயேட்சை எம்எல்ஏ சிவகுமார் ஆதரவுடன் ரங்கசாமி தனி யாக ஆட்சியமைத்தார். இதனால் அதிமுக ஏமாற்றம் அடைந்தது. இந்த விவகாரத்தில் ரங்கசாமியை ஜெயலலிதா கடுமையாக விமர்சித்தார்.
இந்நிகழ்வுக்குப் பிறகு இருகட்சி களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலின்போது ரங்கசாமி முன்மொழிந்த வேட் பாளர் அதிமுக உறுப்பினராகி எம்பியானார். இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக மீண் டும் கூட்டணி அமைக்க வாய்ப் புள்ளதாக பரவலாக பேசப்பட்டது. இதனால் அதிமுகவினரும் ஆளுங் கட்சியை விமர்சிக்காமல் இருந்து வந்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி கூட்டணிக்கான நடவடிக்கைகள் எதும் நடக்கவில்லை. ஜெயலலிதா வின் பிறந்தநாளுக்கு ரங்கசாமி வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே புதுச்சேரி முன்னாள் எம்பி கண்ணன், காங்கிர ஸிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அரியாங்குப்பம், உப்பளத்தில் நடந்த கூட்டங்களில் அதிமுகவினர் என்.ஆர்.காங்கிரஸ் அரசை கடு மையாக விமர்சித்தனர். இதன்மூலம் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக இடையே கூட்டணி ஏற்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் கூறும்போது, “தேர்தல் அறி விப்புக்கு பிறகே ரங்கசாமி அடுத் தக்கட்ட முடிவு எடுப்பார். அதனால் தான் விருப்ப மனு பெறுவது உட்பட எந்தப்பணியும் நடக்கவில்லை. ரங்கசாமி எப்போதும் போல கடை சிக் கட்டத்தில்தான் தனது முடிவை தெரிவிப்பார்” என்கின்றனர்.
இதனிடையே இரு கட்சிகளுக் கும் இடையே கூட்டணிக்கு வாய்ப்பு மங்கத் தொடங்கியுள்ளது. இரு தரப்புமே தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளன என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.