தமிழகம்

அக்.16-ல் பாமக சிறப்பு பொதுக்குழு: ஜி.கே.மணி அறிவிப்பு

செய்திப்பிரிவு

பாமக பொதுக்குழு குறித்துகட்சித் தலைவர் ஜி.கே.மணி நேற்று வெளியிட்ட அறிக்கை:

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 16-ம் தேதி மாலை6 மணிக்கு இணைய வழியில் நடக்க உள்ளது. கட்சி நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணிதலைவர் அன்புமணி முன்னிலையில் நடக்கும் இக்கூட்டத்துக்கு நான் (ஜி.கே.மணி) தலைமை வகிக்கிறேன். பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள பாமக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், கட்சியின் பல்வேறு அணிகளின் அனைத்து நிர்வாகிகள், சிறப்புஅழைப்பாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் இதில் பங்கேற்பார்கள்.

SCROLL FOR NEXT