தமிழகம்

2ஜி வழக்கில் ஸ்டாலின் பெயரை இழுப்பதா? - ஆ.ராசா கண்டனம்

செய்திப்பிரிவு

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் அமலாக்கப்பிரிவினரின் குற்றப்பத்திரிக்கையில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டதற்கு ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, ஸ்வான் தொலைதொடர்பு நிறுவனத்தின் ஷாகித் பால்வாவை ஸ்டாலின் சந்தித்ததாக அமலாக்கப்பிரிவினரின் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டது கட்டுக்கதை என்று தெரிவித்தார்.

“ஸ்டாலினும், பால்வாவும் எந்த காலத்திலும் சந்தித்ததிலை. இது கட்டுக்கதை, அமலாக்கப்பிரிவினர் இட்டுக்கட்டிய கதை, எனது தலைவர் ஸ்டாலினின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்கான அரசியல் முயற்சியே இது” என்றார் ஸ்டாலின்.

அரசியல் முயற்சி என்றால் யார் அந்த முயற்சியைச் செய்தது என்ற கேள்விக்கு, “ஆட்சியில் இருந்த கட்சி” என்றார்.

காங்கிரஸ் கட்சியையா குறிப்பிடுகிறீர்கள் என்ற கேள்விக்கு ஆ.ராசா “ஆமாம்” என்று பதிலளித்தார்.

ஆ.ராசாவுக்கு நெருக்கமாக இருந்த சாதிக் பாட்சா அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் ஸ்டாலின், பால்வா சந்திப்பு நிகழ்ந்தது என்று ஊடகங்களின் சில செய்தி வெளியிட்டன.

ஆனால் சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டதால் அவர் கூறியதாக பதிவு செய்யப்பட்ட விஷயங்கள் இனி செல்லுபடியாகாது என்று ஆ.ராசா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT