தமிழகம்

பள்ளிபாளையம் தேமுதிக நகரச் செயலாளர் ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார்

செய்திப்பிரிவு

பள்ளிபாளையம் தேமுதிக நகரச் செயலாளர் தனது ஆதரவாளர் களுடன், தொழில்துறை அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

பள்ளிபாளையம் தேமுதிக நகரச் செயலாளராக ஆர். செல்வ ராஜ் இருந்தார். அவர் அக்கட்சி யில் இருந்து விலகி தனது ஆதர வாளர்களுடன் அதிமுகவில் இணைய முடிவு செய்தார். கடந்த 22-ம் தேதி மாலை தேமுதிக நகரச் செயலாளர் செல்வராஜ் தலைமையிலான கட்சியினர், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா பள்ளிபாளையத்தில் உள்ள தொழில்துறை அமைச்சர் தங்க மணி அலுவலகத்தில் நடைபெற் றது.

அமைச்சர் தங்கமணி தலைமை வகித்தார். தேமுதிக நகரச் செயலா ளர் செல்வராஜ் தலைமையிலான கட்சியினர் தங்கமணி முன்னிலை யில் அதிமுகவில் இணைந்தனர். அதிமுக நிர்வாகிகள் பலர் விழா வில் கலந்து கொண்டனர். தேமுதிக உருவான ஆண்டில் இருந்து ஆர். செல்வராஜ் நகரச் செயலாள ராக இருந்து வந்தார். அவர் அதிமுகவுக்கு ஆதரவாக செயல் படுவதாக எழுந்த புகாரையடுத்து, கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட் டார். அந்த அதிருப்தியில் அவர் தேமுதிகவில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்ததாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT