கோவை தெற்கு தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதை சரிசெய்ய ஏதுவாக அலுவலக வாட்ஸ்அப் எண்ணை எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், “உங்கள் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கவும், சாலை பழுது குறித்து புகார் தெரிவிக்கவும், புதிய தெருவிளக்குகள் அமைப்பது போன்ற கோரிக்கைகள் குறித்தும் 72003 31442 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம்” என கூறியுள்ளார்.