தமிழகம்

இன்று முக்கிய அறிவிப்பு வருமா? - ‘அமாவாசை’ எதிர்பார்ப்பில் அதிமுகவினர்

செய்திப்பிரிவு

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களில் சிலரை அழைத்து நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா திடீரென நேர்காணல் நடத்தினார். முதல்வரின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த நேர்காணலில் சென்னை கவுன்சிலர் நூர்ஜகான், துணை மேயர் பெஞ்சமின், ஊத்தகங்கரை எம்எல்ஏ மனோ ரஞ்சிதம், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிட்ல பாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘கடந்த 2011 தேர்தலின்போது, தொகுதிக்கு 3 பேர் என அழைத்து நேர்காணல் நடத்தி ஒருவரை தேர்வு செய்தார் ஜெயலலிதா. தற்போது, பிர தோஷ தினம் என்பதால் நேர் காணலை நடத்தினார்.

நேர்காணலில் பங்கேற்ற வெற்றிவேலுக்கு பெரம்பூர் அல்லது வில்லிவாக்கம் தொகுதி ஒதுக்கப்படலாம். திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் நூர்ஜகானுக்கும் தாம்பரம் தொகுதியில் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்’’ என்றார்.

இதற்கிடையே இன்று அமாவாசை என்பதால் முதல்வர் ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என அதிமுகவினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT