தமிழகம்

ஆணவக் கொலைகளை தடுக்க கிரிமினல் சட்டத்தில் திருத்தம் அவசியம்: கனிமொழி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கனிமொழி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் சங்கர் என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்ததற்காக கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொடூர கொலை சம்பவம், காவல் துறையின் குற்ற ஆவணப் புத்தகத்தில் இன்னொரு புள்ளி விவரமாக சேர்க்கப்படுவதோடு நின்றுவிடும் என்பதுதான் சோகமான விஷயம்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 50 கவுரவக் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதில் தொடர்புடைய ஒரு குற்றவாளிக்குக்கூட தண்டனை வழங்கப்படவில்லை. இந்த நிலைமை மாறவேண்டும் என்றால் சமூக, அரசியல், சட்ட செயற்பாட்டாளர்களின் ஒருமித்த முயற்சியால் மட்டுமே முடியும். பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆணை திருமணம் செய்துகொண்டால் இந்திய சூழலில், அது வன்முறையில்தான் முடிகிறது.

டெல்லி நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு அரசியல் சக்திகளின் முயற்சியால் 2013-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான கிரிமினல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. கவுரவக் கொலை விவகாரங்களில் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட் ்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சி சொல்ல மறுக்கின்றனர் அல்லது மறுக்குமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதுதான் கவுரவக் கொலை வழக்குகளில் குற்றவாளிகளை தண்டிக்க பெரும் தடையாக இருக்கிறது. எனவே, கிரிமினல் சட்டக் கூறுகளில் மாற்றம் செய்யவேண்டியது அவசியம்.

இவ்வாறு கனிமொழி தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT