தமிழகம்

நாடாளுமன்றம் முற்றுகை: மீனவர்கள் டெல்லி பயணம்

செய்திப்பிரிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் வரும் 10-ம் தேதி டெல்லியில் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக மீனவர்கள் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து, தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் கு.பாரதி கூறியதாவது:

வேளாண் துறைக்கு தனி அமைச்சகம் உள்ளது போல மீனவர் நலன் மற்றும் மீன்வளத்துக்கு என தனியாக ஓர் அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும்.

மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலை உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும். மீன்கள் ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் கோடி அந்நிய செலவாணி வருவாய் கிடைக்கிறது. எனவே, மீனவர்கள் தங்கள் தொழிலுக்குத் தேவையான கடனுதவியைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் வங்கி இருப்பது போல மீனவர்களுக்கு என பிரத்யேக வங்கி தொடங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் வரும் 10-ம் தேதி தலைநகர் டெல்லியில் மாபெரும் பேரணி மற்றும் நாடாளுமன்றம் முற்றுகை நடத்த உள்ளோம். இதில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (நேற்று) டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறோம்.

இவ்வாறு பாரதி கூறினார்.

SCROLL FOR NEXT