தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே. வாசன் எம்பி தலைமையில் வேடசந்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தண்டபாணி தமாகாவில் தன்னை இணைத்துக் கொண்டார். 
தமிழகம்

முன்னாள் எம்எல்ஏ தண்டபாணி தமாகாவில் இணைந்தார்

செய்திப்பிரிவு

காங்கிரஸில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. தண்டபாணி தமாகாவில் இணைந்தார்.

இதுகுறித்து தமாகா தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்தண்டபாணி த.மா.கா.வில் இணைந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தண்டபாணி முன்பு வேடசந்தூர் தொகுதி தமாகா எம்எல்ஏ.வாக இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இப்போது மீண்டும் தமாகாவில் இணைத்துக் கொண்டுள்ளார்” என்று தமாகா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT