கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உட்பட 13 கடலோர மாநிலங்களைச் சேர்ந்த மீனவர் கள் நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர்.
இது குறித்து தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ `தி இந்து’விடம் கூறியதாவது:
பாரதீய ஜனதா தேசிய தலைவராக நிதின்கட்கரி பதவி வகித்தபோது கடந்த 2010-ம் ஆண்டு மீன்வளம் மற்றும் மீனவர்களுக்கான பா.ஜ.கவின் பிரகடனம் மூலம் மீனவர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறை வேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தனர்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் 2014-ம் ஆண்டு மக்க ளவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள்.
ஆனால், பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும் மீனவர்களுக்கு அளித்த கோரிக்கைகளை நிறை வேற்றவில்லை. மத்திய பட்ஜெட் டில்கூட மீனவர்கள் கோரிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தோம். ஏமாற்றம் தான் மிஞ்சியது.
எனவே மத்திய அரசில் மீன் வளம் மற்றும் மீனவர் நலனுக்கு எனத் தனி அமைச்சகம் உரு வாக்க வேண்டும், மீன்பிடித் தொழிலை, விவசாயத்துக்கு இணையானதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும், புயல், சூறா வளி, சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின் போது விவசாயி களின் வங்கிக் கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய் யும்போது மீனவர்களின் தொழில் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மார்ச் 10-ம் தேதி (வியாழக்கிழமை) கேரளா, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, குஜராத், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஒடிசா, மேற்குவங்கம், கோவா, டையு, டாமன் உள்ளிட்ட 13 கடலோர மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் டெல்லியில் பேரணியாகச் சென்று நாடாளு மன்றத்தை முற்றுகையிட உள்ளோம் என்றார்.