சரவணன் 
தமிழகம்

உளவுத் துறையில் மேலும் ஒரு எஸ்.பி. நியமனம்

செய்திப்பிரிவு

தமிழக காவல் துறையின் உளவுத் துறையில் மேலும் ஒரு எஸ்.பி.யாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக உளவுத் துறை கூடுதல் டிஜிபியாக எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம், டிஐஜியாக ஆசியம்மாள் உள்ளனர். இத்துறையில் உயர் அதிகாரிகள் இருந்தாலும், எஸ்.பி.பதவி முக்கிய பொறுப்பாக உள்ளது.மாவட்ட, மாநில அளவிலான அனைத்து முக்கிய நிகழ்வுகளும் உளவுத்துறை எஸ்.பி.யின் கவனத்துக்கே முதலில் கொண்டு செல்லப்படும். அவர்தான் தகவல்களை ஒருங்கிணைத்து, உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பார்.

உளவுத் துறை எஸ்.பி.யாக தற்போது அரவிந்தன் பணியாற்றி வரும் நிலையில், தமிழக காவல் துறை வரலாற்றில் முதல்முறையாக உளவுத் துறைக்கு மேலும் ஒரு எஸ்.பி.யாக சரவணன் நியமிக்கப் பட்டுள்ளார்.

இதற்கு முன்பு இவர் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவில் எஸ்.பி.யாக இருந்தார். இந்தப் பிரிவும் உளவுத் துறையின் கீழ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT