புதிதாக உருவாகியுள்ள தமிழ்நாடு பட்டதாரிகள் கூட்டமைப்பு கட்சி, சென்னையில் நேற்று கட்சியின் கொள்கை விளக்கம் மற்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சித் தலைவர் தங்க கணேசன், பொதுச்செயலாளர் ஜீ.சோமு, பொருளாளர் செ.கணேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கட்சியின் கொள்கைகளை விளக்கினர்.
பின்னர் தங்க கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது: கல்வியில் மாற்றம்-மக்களின் முன்னேற்றம் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு ஒருமித்த கருத்துடைய இளைஞர்கள், கல்வியாளர்கள், தன்னார்வ அமைப்புகளை ஒருங்கிணைத்து புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் எந்த முக்கியக் கட்சியையும் நாங்கள் ஆதரிக்கப்போவதில்லை. இந்த மாத இறுதியில் கோவையில் நடக்கும் கொங்கு மண்டல மாநாட்டில் எங்களது அணியில் உள்ள அமைப்புகள், ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் குறித்து தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.