தமிழகம்

யாருடன் கூட்டணி? - வாசனிடம் மாணவர்கள் கேள்வி

செய்திப்பிரிவு

மக்களின் மனநிலைக்கேற்ப வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா கூட்டணி அமைக்கும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக கல்லூரி மாணவர்க ளுடன் நேற்று அவர் கலந்துரை யாடினார். சென்னை தேனாம் பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடை பெற்ற இந்த கலந்துரையாடலில் தமாகா துணைத் தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன். பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

தமிழக அரசியல் சூழல், சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து மாண வர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவீர்கள்? திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைவீர்களா? என்ற சிலர் கேள்வி எழுப்பினர் அவர்களுக்கு பதிலளித்து வாசன் பேசியதாவது:

பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தமாகா வுக்கு பலம் இல்லை. மக்கள் மனநிலைக்கேற்ப, தொண்டர் களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக் கும் வகையில் தமாகா கூட்டணி அமைக்கும். காங்கிரஸ் தொண் டர்களில் 80 சதவீதம் பேர் எங்க ளுடன் உள்ளனர். அதுதான் தமாகா வின் பலம். விவசாயிகள் பிரச் சினை, நதிநீர் பிரச்சினை உள்ளிட்ட தமிழக மக்களின் நலன்சார்ந்த பிரச்சினைகளுக்காக தமாகா தொடர்ந்து குரல் கொடுக்கும்.

இவ்வாறு வாசன் கூறினார்.

SCROLL FOR NEXT