தேர்தல் நடவடிக்கையாக பணத்தை பறிமுதல் செய்யும்போதோ, உரி யவர்களிடம் திருப்பித் தரும் போதோ பறக்கும் படையினர் லஞ்சம் வாங்குவது கண்டுபிடிக்கப்பட் டால் பணி இடைநீக்கம் செய்யப் படுவார்கள் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்தார்.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி யாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று கூறியதாவது:
தேர்தலையொட்டி வாக்காளர் களை கவர்வதற்காக பணம் எடுத் துச் செல்லப்படுவதைத் தடுக்கும் நோக்கில், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல் வது தடுக்கப்படுகிறது. அதன்படி, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. உரிய ஆவணங்கள் இருந்தால், அவை சரிபார்க்கப்பட்டு பணம் திருப்பித் தரப்படுகிறது.
ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து உள்ளோம். அவர்கள் ஒப்புதல் அளித்தால் பொதுமக்கள், வியாபாரிகள் ரூ.1 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். அதுவும் வேட்புமனு தாக்கல் தொடங்கும் ஏப்ரல் 22-ம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
டெல்லியில் இருந்து கண்காணிப்பு
பணத்தை பறிமுதல் செய்யும் போதும், ஆவண சரிபார்ப்புக்குப் பிறகு பணத்தை திருப்பித் தரும் போதும் பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபடுவோர் லஞ்சம் பெறுவதாக புகார் கூறப்படுகிறது. அவ்வாறு லஞ்சம் வாங்குவது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள்.
பறக்கும் படையினர் லஞ்சம் பெறுவதை தடுக்க வரும் 21-ம் தேதி (நாளை) முதல் ஜிபிஎஸ் நவீன தொழில்நுட்பம் மூலம் கண் காணிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட உள்ளன. இதற்காக பறக்கும் படையினரின் 702 வாகனங்களி லும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப் பட்டுள்ளது. வாகன சோதனைச் சாவடிகளிலும் இக்கருவி பொருத் தப்பட்டுள்ளது. இதன்மூலம் லஞ்சம் வாங்குவது போன்ற குற்றச்செயல்கள் முழுவதுமாக தடுக்கப்படும். ஜிபிஎஸ் தொழில் நுட்ப வசதி இருப்பதால், பறக்கும் படையினரின் நடவடிக் கையை டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர்களும் கண்காணிப்பார்கள்.
கூகுளுடன் இணைந்து பிரச்சாரம்
தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை எட்டுவதற்காக ட்விட்டர் வலைதளத்துடன் இணைந்து செயல்பட உள்ளோம். ஃபேஸ்புக் வலைதளத்துடன் இணைந்து செயல் படுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடக்கிறது. ‘நீங்கள் ஓட்டு போட்டுவிட்டீர்களா, இல்லையா?’, ‘வாக்களிக்காவிட்டால் உடனே உங்கள் வாக்கை பதிவு செய் யுங்கள்’ என வாக்குப்பதிவை நினைவூட்டுவது போன்ற பதிவுகள், வாக்குப்பதிவு தொடர்பான கேள்வி, பதில்கள் ஆகியவை ஃபேஸ்புக்கில் இடம்பெறும். தேர் தல் விழிப்புணர்வுக்காக கூகுள் நிறுவனத்துடனும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.
பூத் சிலிப் கொடுக்க தடை?
டெல்லியில் இன்று (மார்ச் 19) தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில், நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக் கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். முன்பெல்லாம் வாக்கு எண்ணிக்கை தொடங் கும் முன்பு, அனைத்து வாக்குச் சீட்டுகளையும் பெரிய டிரம்மில் போட்டு கலக்குவார்கள். அதுபோல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களில் பதிவாகும் வாக்குகளையும் ஒரு பெரிய தொகுப்பு இயந்திரத் துக்கு மாற்றிவிட்டு பிறகு எண்ணு வது குறித்து இதில் விவாதிக்கப் பட்டது. இதுசம்பந்த மாக கட்சி களிடம் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகுதான் இது செயல்படுத்தப்படும்.
கடந்த சில தேர்தல்களில் வாக் காளர்களுக்கு பூத் சிலிப்பை தேர்தல் ஆணையமே வழங்கி வரு கிறது. அதனால், வாக்குச்சாவடிகள் அருகே சிறிய கூடாரம் அமைத்து, மேஜை, நாற்காலி போட்டுக் கொண்டு கட்சியினர் பூத் சிலிப் கொடுப்பதை நிறுத்த உத்தர விடலாமா என்பது குறித்தும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.
தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கமல், ஸ்ருதி, நயன்தாரா, சமந்தா
100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரக் காட்சியில் சூர்யா நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் ஸ்ருதிஹாசன், நயன்தாரா, சமந்தா ஆகியோரும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர். இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் பேசியுள்ளோம். சென்னையில் மார்ச் 20-ல் (இன்று) நடக்கும் நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்க உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.