கிண்டி பொறியியல் கல்லூரி முன் னாள் மாணவர்கள் சங்க (ஏஏசிஇஜி) துணைத்தலைவர் டி.வாசுதேவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் 550 முன் னாள் மாணவர்கள் தங்கள் குடும்பங்களுடன் கலந்துகொண்ட னர். கிண்டி பொறியியல் கல் லூரி டீன் பி.நாராயணசாமி அனை வரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் பி.கருணாகரன் பேசும்போது, “கிண்டி பொறியியல் கல்லூரி 222 ஆண்டுகள் பழமையானது. நமது முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி 91-வது ஆண்டாக நடை பெறுகிறது. இது மிகவும் பெருமை படத்தக்கது. வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நமது சங்கம் சார்பில் ஒரு மேம்பாட்டு மையத்தை தொடங்கவுள்ளோம். இதன் மூலம் ஒரு வருடத்துக்குள் குறைந்தபட்சம் 25 சிறு நிறுவனங் களுக்கு உதவ முடியும். இதன் மூலம் பிரதமரின் கனவை நன வாக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.
கிண்டி பொறியியல் கல்லூரி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏஏசிஇஜி சார்பில் சிறிய குளம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதன்மூலம் கல்லூரி நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை மிச்சமாகும்.
முதன்மை பேச்சாளராக கே.வாசுதேவன் கலந்துகொண்டு தனது மாணவப் பருவ அனுப வங்களை பகிர்ந்துகொண்டார். பல்வேறு துறைகளில் ஆற்றிய சிறந்த பணிகளுக்காக என்.ரகு ராஜ், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.விஜயராகவன், என்எஸ்.னிவாசன், பி.வி.பார்த்த சாரதி ஆகியோருக்கு புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருது வழங்கப் பட்டது. கிண்டி பொறியியல் கல்லூரி யில் படிக்கும் சிறந்த மாணவர் களுக்கு 99 பதக்கங்கள், 23 உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. 80 வயது நிறைவடைந்த 14 முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கவுரவிக் கப்பட்டனர். ஏஏசிஇஜி செயலாளர் எம்.சண்முகம் நன்றி கூறினார்.