தமிழகம்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புதியவர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

அரசு பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புதியவர்களைச் சேர்க்க தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 16-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 4-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனால் அரசு பொதுமருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புதியவர்களை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடுமையான நோய்கள் தாக்கும் போதும், அறுவை சிகிச்சைக்காவும் ஏழை, நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல காப்பீட்டுத் திட்டமே வாய்ப்பாக உள்ளது.

எனவே, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புதியவர்களைச் சேர்க்க தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT