தமிழகம்

ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

செய்திப்பிரிவு

ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆயுதபூஜையை முன்னிட்டு, பயணிகளின் தேவைக்கு ஏற்றார்போல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, வரும் 12, 13-ம்தேதிகளில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரம்பேருந்துகளோடு 500 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மேற்கண்ட நாட்களில் சென்னை கோயம்பேடு, தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்படும்.

மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தி லிருந்து தேவையான அளவுக்கு இணைப்பு பேருந்துகள் மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT