திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள முக்கரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (60). இவரது மனைவி சரளா(55), மகள் அர்ச்சனா(28). இந்நிலையில், பல் மருத்துவம் படித்த அர்ச்சனா, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக, ஏற்கெனவே இரு திருமணம் செய்த 35 வயது இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதனால் வருத்தமடைந்த சரளா, நேற்று காலை,வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டுள்ளார். இதை தாங்க முடியாமல்,தாமரைச்செல்வன் களைக்கொல்லி மருந்தை அருந்தியுள்ளார். அக்கம்பக்கத்தினர் தாமரைச்செல்வனை வெங்கலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, ஊத்துக்கோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.