தமிழகம்

அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல்: முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடந்தது

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர் களிடம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று நேர் காணல் நடத்தப்பட்டது.

தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல் மே 16-ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிம் இருந்து கடந்த ஜனவரி 20-ம் தேதி முதல் பிப்ரவரி 6-ம் தேதி விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 26,174 பேர் விருப்ப மனுக்களை அளித்திருந்தனர்.

இதில் 7,936 பேர் முதல்வர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி மனு அளித்திருந்தனர். இதுதவிர தமிழகத்தில் தங்களுக்கு வாய்ப்பு அளிக்கக் கோரி 17,698 பேரும், புதுச்சேரிக்கு 332 பேரும், கேரளாவில் வாய்ப்பு கேட்டு 208 பேரும் விருப்ப மனுக்கள் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில், விருப்ப மனு அளித்த வர்களுக்கான நேர்காணல், முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத் தில் நேற்று நடந்தது. இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளி யிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டி யிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு செய்திருந்தவர்களுக்கான நேர் காணல், அதிமுக பொதுச் செயலா ளரும் முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் இன்று (6-ம் தேதி) நடைபெற்றது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

விருப்ப மனு அளித்தவர் களில் தகுதியானவர்கள் பட்டி யலை தயாரித்து, அதன்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படு கிறது. நேற்று நடந்த நேர்காணலில் ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜன், சென்னை துணை மேயர் பெஞ்சமின், கவுன்சிலர் நூர்ஜகான், காஞ்சிபுரம் மேற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆர்.கே.நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

நேர்காணலின்போது அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT