குஷ்பு: கோப்புப்படம் 
தமிழகம்

பாஜக தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராக நியமனம்: பிரதமருக்கு குஷ்பு நன்றி

செய்திப்பிரிவு

பாஜக தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகத்திலிருந்து குஷ்பு, ஹெச்.ராஜா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜகவின் தேசிய செயற்குழுவில் நரேந்திர மோடி, மூத்தத் தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் தேசிய தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி, பியூஷ் கோயல் உள்ளிட்ட 80 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இக்குழுவுக்கு 50 சிறப்பு அழைப்பாளர்கள், 179 நிரந்தர அழைப்பாளர்களை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகத்திலிருந்து குஷ்பு, ஹெச்.ராஜா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹெச்.ராஜா: கோப்புப்படம்

இந்நிலையில், தன்னை சிறப்பு அழைப்பாளராக நியமித்துள்ளதற்கு பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா ஆகியோருக்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (அக். 07) தன் ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி மற்றும் ஜே.பி.நட்டா இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. இது எனக்கு மிகவும் பெருமையான தருணம்" என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT