மருங்காபுரி ஒன்றியம் 10-வது வார்டு பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண்களிடம் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. 
தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் திமுக பெறும் வெற்றி மீதமுள்ள 303 வாக்குறுதிகளை நிறைவேற்ற உத்வேகம் அளிக்கும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியக் குழு 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் ச.சபியுன் நிஷாவுக்கு ஆதரவாக வளநாடு, கவுண்டம்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு நீங்கள் அளிக்கப் போகும் வெற்றி, மீதமுள்ள 303 வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவதற்கான ஊக்கத் தையும், உத்வேகத்தையும் கொடுக்கும்” என்றார்.

அவருடன் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் கோவிந்தராஜன், ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், சின்ன அடைக்கன், மாவட்டக் கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றியக் குழுத் தலைவர் பழனியாண்டி உள்ளிட்டோர் சென்றனர்.

SCROLL FOR NEXT