தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “ தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு , வேலூர், ராணிப்பேட்டை கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்.
இதேபோல் புதுவை, கரைக்காலில் லேசான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக காஞ்சிபுரத்தில் 18 செமீ மழை பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.