சென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் நாளை(மார்ச் 14-ம் தேதி) வெளியிடப்படும் என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னைப் பல்கலைக்கழகத்தால் நவம்பர் 2015-ல் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை மற்றும் தொழில் பட்ட படிப்புகளுக்கான தேர்வின் மறுமதிப்பீடு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை(மார்ச் 14-ஆம் தேதி) மாலை இந்த முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். http://unom.ac.in, http://results.unom.ac.in ஆகிய இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.