தமிழகம்

திமுகவில் நேர்காணல் முடிந்தது: மு.க.ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட துரைமுருகன்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்பட்டு வந்தது. மார்ச் 7-ல் நேர்காணல் நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால், நேரமின்மை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம், எழும்பூர், திருவிக நகர், கொளத்தூர், வில்லி வாக்கம், அம்பத்தூர் ஆகிய 6 தொகுதிகளுக்கு நேற்று காலை நேர் காணல் நடத்தப்பட்டது.

கொளத்தூர் தொகுதிக்கு மு.க.ஸ்டாலின் பெயரில் மட்டுமே பலர் விருப்ப மனுக்களை அளித் திருந்தனர். வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, கொளத்தூர் தொகுதிக்கு அவர் மட்டுமே நேர்காணலில் பங்கேற்றார். அவருக்காக அளிக்கப்பட்டிருந்த விருப்ப மனுக்களை திமுக தலைவர் கருணாநிதி படித்துப் பார்த்தார். ஸ்டாலினிடம் துரைமுருகன் நேர் காணல் நடத்தினார்.

‘‘கொளத்தூர் தொகுதியில் ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்துள் ளீர்கள். உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது’’ என்பது உள் ளிட்ட சில கேள்விகளை துரைமுரு கன் கேட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியோ, பொதுச் செய லாளர் அன்பழகனோ கேள்வி எதுவும் கேட்கவில்லை என்று கூறப்படு கிறது. கடந்த 6-ம் தேதி வேலூர் மாவட்டத்துக்கான நேர்காணல் நடந்தபோது, அதில் துரைமுருகன் பங்கேற்றார். அப்போது அவரிடம் ஸ்டாலினும் ஆர்.எஸ்.பாரதியும் கேள்விகளை கேட்டதாக கூறப் பட்டது. துறைமுகம் தொகுதிக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர் பாபு, கவிஞர் சல்மா, எழும்பூர் தொகுதிக்கு துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, தமிழன் பிரசன்னா உள்ளிட்டோர் நேர்காண லில் பங்கேற்றனர்.

நேர்காணல் தொடர்பாக நிருபர்க ளிடம் கருணாநிதி கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் விண்ணப்பித்தி ருந்த 4,362 பேர், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் விண்ணப் பித்திருந்த 71 பேர் என மொத்தம் 4,433 பேரிடமும் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவங்கள் விற்பனை மூலம் ரூ.63 லட்சத்து 66 ஆயிரமும், 5 ஆயி ரத்து 661 விருப்ப மனுக்களுக்கு கட்டணமாக ரூ.12 கோடியே 37 லட்சத்து 25 ஆயிரமும் வசூலாகி யுள்ளது என கருணாநிதி கூறினார்.

          
SCROLL FOR NEXT