தமிழகம்

தேர்தல் பணிகள் அதிமுகவில் ஆரம்பம்

செய்திப்பிரிவு

தேர்தலுக்கான முதல்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது அதிமுக.

இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இருக்கும் அமைச்சர்கள் உடனடியாக, தேர்தல் அறிக்கையை இறுதி செய்ய வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர். வைத்திலிங்கம் உட்பட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கூடி, தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசித்து, அவற்றை இறுதி செய்து, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிக்கையை அனுப்பி வைத்துள்ளதாகவும் அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT