தமிழகம்

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எப் செயற்கைக்கோள்: இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது

செய்திப்பிரிவு

கடல் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என். எஸ்.எஸ் -1எப் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி-சி 32 மூலம் இன்று மாலை விண்ணில் செலுத்தப் படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. கடல் ஆராய்ச்சிக்கு பிரத்யேகமாக 7 செயற்கைக்கோள் களை ஏவுவதற்குத் திட்டமிட்டு, இதுவரை 5 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

ஆறாவது செயற்கைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எப், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவு தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி32 ராக்கெட் மூலம் இன்று மாலை 4 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் 320 டன் எடையும், 44.4 மீட்டர் நீளமும் கொண்டது. செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதற் கான 54 மணி நேர கவுன்ட் டவுன் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங் கியது.

இந்தியாவிலே உருவாக்கப் பட்ட 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எப் செயற்கைக்கோள் புவிவட்டப் பாதையில் குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலைநிறுத்தப்படும்.

இந்தியாவில் உள்ள பயனாளி களுக்கு மட்டுமல்லாமல், செயற் கைக்கோள் நிலைநிறுத்தப்படும் இடத்தில் இருந்து ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சுற்றளவு வரையிலான கடல்சார் தகவல் களைத் துல்லியமாகத் தரும் வகையில் வடிவமைக்கப்பட் டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT