புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 10.22 லட்சமானது. கரோனாவுக்கு ஏனாம் முதியவர் பலியானார்.
புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 832 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 42 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 78, காரைக்காலில் 16, ஏனாமில் 4, மாஹேவில் 8 பேர் என 106 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 331, காரைக்காலில் 151, ஏனாமில் 5, மாஹேவில் 61 பேர் என 548 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 654 பேர் கரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவையில் 65, காரைக்காலில் 21, மாஹேவில் 10 பேர் என 96 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
ஏனாமைச் சேர்ந்த 75 வயது முதியவர் கரோனா சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 842 ஆக அதிகரித்துள்ளது. புதுவையில் 2-வது தவணை உட்பட 10 லட்சத்து 22 ஆயிரத்து 249 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.