தமிழகம்

ஜெ. வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு தின மும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் வருகின்றனர். நேற்றும் அதேபோல ஏராளமான தொண்டர்கள் வந்தனர். அப் போது ஒரு நபர் திடீரென கேனில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

போலீஸ் விசாரணையின்போது இது பற்றி கூறிய அவர், “எனது பெயர் ராமசாமி. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து வந்திருக்கிறேன். அரசு ஒப்பந்த பணிகளை எடுத்துத் தருவதாக கூறி மணப்பாறை அதிமுக ஒன்றிய செயலாளர் சேது, என்னிடம் இருந்து பல லட்சம் ரூபாயை வாங்கி ஏமாற்றி விட்டார். இதுகுறித்து போலீஸில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவேதான் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து புகார் கொடுக்க வந்தேன்” என்றார்.

இதேபோல முதல்வர் ஜெயலலிதா வின் வீடு அமைந்துள்ள சாலையில் ஒரு பெண், தனது குழந்தையுடன் அமர்ந்து, உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஜா என்பதும் அவர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. கட்சியில் பல ஆண்டுகளாக இருக்கும் தனக்கு முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்றும் இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிப்பதற்காக வந்திருப்பதாகவும் போலீஸாரிடம் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT