தமிழகம்

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்வோர் அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவ.4-ம் தேதி (வியாழன்) வருகிறது. வெள்ளி ஒரு நாள் விடுப்பு எடுத்தால், சனி, ஞாயிறுஎன தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே, சென்னையில் வசிக்கும் வெளியூர்மக்கள் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிடுவார்கள்.
விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டதால், சிறப்பு ரயில்கள் அறிவிப்புக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, அரசு விரைவு பேருந்துகளில் இன்று (திங்கள்கிழமை) முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவித்தது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை,திருப்பூர், சேலம், கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சொகுசு, படுக்கை வசதி கொண்ட சொகுசு மற்றும் ஏசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி தீபாவளிப் பண்டிகைக்காக நவம்பர் 3 ஆம் தேதியே சொந்த ஊர் செல்ல விரும்புவோர் இன்று டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

எப்படி முன்பதிவு செய்வது:

அரசு விரைவுப் பேருந்துகளில், ஏசி பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் https://www.tnstc.in/ என்ற இணையதளம், டிஎன்எஸ்டிசி செயலி உள்ளிட்ட அரசு செயலி மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதுதவிர பேருந்து பயணத்துக்கென இருக்கும் தனியார் புக்கிங் இணையதளங்கள் வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். சென்னையில் உள்ளோர் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அதேபோல் அந்தந்த மாவட்டங்களிலும் நேரடியாக பேருந்து நிலையங்களிலேயே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

SCROLL FOR NEXT