தமிழகம்

தமிழகம், புதுச்சேரி பேரவைத் தேர்தலில் திமுக ரூ.114 கோடி, அதிமுக ரூ.57 கோடி செலவு: தேர்தல் ஆணையம் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகம், புதுச்சேரியில் நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக ரூ.114 கோடியும் அதிமுகரூ.57 கோடியும் செலவு செய்திருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.

தமிழகம், புதுச்சேரி, கேரளா,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் செய்த செலவு விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தன. அதுதொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக ரூ.114.14 கோடியும், அதிமுக ரூ.57.33 கோடியும் செலவுசெய்துள்ளன. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக ரூ.30 லட்சம் செலவு செய்ததாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அதேபோல, மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ரூ.154.28 கோடி செலவு செய்திருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தகவல் அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.84.93 கோடி செலவிட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிதான் அதிக அளவு செலவு செய்துள்ளது.

பேரவை தேர்தலில் திமுக,அதிமுக, காங்கிரஸ், திரிணமூல் உள்ளிட்ட கட்சிகள் செய்த செலவுகளை வெளியிட்டுள்ள இந்தியதேர்தல் ஆணையம் பாஜக எவ்வளவு செலவு செய்தது என்பதுதொடர்பான விவரத்தை கடந்த 2-ம் தேதி வரை வெளியிடவில்லை.

SCROLL FOR NEXT