பழநி பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று இரவு நடைபெறுகிறது. தேரோட்டம் நாளை மாலை நடைபெறுகிறது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரத் திரு விழா, கடந்த மார்ச் 17-ம் தேதி திருஆவினன்குடி கோயிலில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், இரண்டாம் நாள் காலை யில் தந்தப் பல்லக்கிலும், மாலையில் வெள்ளி காமதேனு வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
மூன்றாம் நாள் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித் தார். நான்காம் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு, தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார்.
நேற்று மலைக் கோயிலில் திருக்கோயில் சார்பாக தங்கரதப் புறப்பாடும், இரவில் யானை வாகனத்தில் சன்னதி வீதி, கிரி வீதிகளில் சுவாமி உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெற் றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7.30 மணிக்கு வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண உற்சவம் திரு ஆவினன்குடியில் நடைபெற உள் ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான தேரோட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.