கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும் பத்துக்கு, தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் கூட்டியக்கம் வலி யுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே கொத்தங்குடி யில் கடன் தொல்லையால் தற் கொலை செய்துகொண்ட விவ சாயி தனசேகரின் குடும்பத்தின ருக்கு, தமிழக அனைத்து விவ சாய சங்கங்களில் கூட்டியக்கத் தலைவர் ஈரோடு தெய்வசிகாமணி, துணைத் தலைவர் காவிரி தன பாலன் ஆகியோர் நேற்று ஆறு தல் கூறினர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர் களிடம் கூறியது: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2,400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது, வேதனை யான விஷயம் மட்டுமல்ல, தேசிய அவமானமாகும்.
மத்திய, மாநில அரசுகள் விவ சாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து, அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி தனசேகர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவார ணம் வழங்க வேண்டும் என்றனர்.