தமிழகம்

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழக அரசு நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் தமிழாசிரியர் (கிரேடு-1) பணியில் 2 காலியிடங்களும், ஓட்டுநர் பணியிடம் ஒன்றும், அலுவலக உதவியாளர் பணியில் 2 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. தமிழாசிரியர் பணிக்கு பி.ஏ. (தமிழ் இலக்கியம்) அல்லது பி.லிட்., பட்டத்துடன் பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் இந்த பணிகளுக்கு மார்ச் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044-28190412, 28190413 ஆகிய தொலைபேசி எண்களில் தமிழ் வளர்ச்சி இயக்கக அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். அலுவலக முகவரி:- இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600 008.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT