தமிழகம்

அரசு ஊழியர் துறைத்தேர்வுக்கு ஏப்.11 வரை விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு துறைத்தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை (மே, டிசம்பர்) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படுகிறது.

அந்த வகையில், மே மாதம் நடைபெறவுள்ள துறைத்தேர்வுக்கு மார்ச் 31-ம் தேதி வரை ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், துறைத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 11-ம் தேதி மாலை 5.45 மணிவரை நீட்டிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT