இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை வரும் மார்ச் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி எம்.சாந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. டக்ளஸ் தேவானந்தா தரப்பு வழக்கறிஞர் ஆர்.ராஜன், காணொலி காட்சி மூலம் தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்த வேண்டும் எனில் அதற்கு சனிக்கிழமைதான் வசதியாக இருக்கும் என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் எம்.பிரபாவதி, ‘‘இந்த வழக்கை விரைவாக விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். அரசு தரப்பு சாட்சிகளை ஆஜர்படுத்த போலீஸார் தயாராக உள்ளனர்’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி வழக்கு விசார ணையை வரும் மார்ச் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.