போதைப் பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டுமுதல்வர் தடுக்க வேண்டும் என்றுஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த 5 மாத திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்து, சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
வடமாநிலங்களைச் சேர்ந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், விமானத்தில் வந்திறங்கி தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வங்கிக் கொள்ளை, செயின் பறிப்பு,ஆள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. அந்நிய நாடுகளில் இருந்து போதைப் பொருட்களை நாடு முழுவதும் கடத்தி விற்கும் வழித்தடமாக சென்னையும், தமிழகத்தின் பல்வேறுமாவட்டங்களும் அமைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. எனவே, போதைப் பொருள் நடமாட்டத்தை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும்.