கேபிள் மூலம் பிராட்பேண்ட் இணைப்பு வழங்க முடியாத இடங்களில், மக்களின் வசதிக்காக `பாரத் ஏர் ஃபைபர்' என்ற வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என் எல், பொதுமக்களுக்கு தரைவழி தொலைபேசி, மொபைல், பிராட் பேண்ட் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.
மேலும், தனியார் நிறுவனங் களின் போட்டியை சமாளிக்க, அவ் வப்போது புதிய சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அறி முகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது `பாரத் ஏர் ஃபைபர்' என்ற வயர்லெஸ் பிராட் பேண்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவன தலைமைப் பொது மேலாளர் வி.கே.சஞ்சீவி ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவனத்துக்கு 3.50 லட்சம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள், 25 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்கள், 80 ஆயிரம் பிராட்பேண்ட் வாடிக் கையாளர்கள் உள்ளனர். மேலும், 35 ஆயிரம் பேர் வீடுகளுக்கு ஃபைபர் கேபிள் இணைப்பு பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பு வழங்கும் வகையில் `பாரத் ஏர் ஃபைபர்' என்ற திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கேபிள் மூலம் பிராட்பேண்ட் இணைப்பு தருவதற்கான வசதி இல்லாத பகுதிகளில், வயர்லெஸ் முறையில் இணைப்பு வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக் கம். குறிப்பாக, உள்ளடங்கிய பகுதி களில் இருக்கும் வீடுகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், கல்வி நிறு வனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற் றுக்கு இந்த இணைப்பு வழங் கப்படும்.
வயர்லெஸ் மூலம் இந்த இணைப்பு வழங்கப்படுவதால், இதற்காக அப்பகுதியில் ஆன் டெனா பொருத்தப்படும். இதன் மூலம், சம்பந்தப்பட்ட இடத்துக்கு மட்டும் பிரத்யேக இணைப்பு வழங் கப்படும். இதனால், முழுமையாக பிராட்பேண்ட் வேகத்தைப் பெற லாம். குறைந்தபட்சம் 30 எம்பிபிஎஸ் முதல் அதிகபட்சம் 70 எம்பிபிஎஸ் வரை வேகம் இருக்கும். உச்சவரம்பின்றி டேட்டாக்களை பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த இணைப்பு பெறும்போது, மோடம், ஆன்டெனா ஆகியவற் றுக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை செலவாகும். மாதம் ரூ.499, ரூ.699, ரூ.899, ரூ.1,199 என பல விதங்களில் கட்டணம் உள்ளது.
மேலும், இந்த இணைப்பை வழங்கும்போது, இலவச தரைவழி தொலைபேசி இணைப்பும் வழங் கப்படும். இதன்மூலம், அளவில்லா உள்ளூர், வெளியூர் அழைப்புகளில் பேசலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.