கோப்புப் படம் 
தமிழகம்

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம்; ‘கியூஆர் கோடு’ஸ்கேன் மூலம் வசூல்: தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் அறிமுகம்

என்.சன்னாசி

தமிழகத்திலேயே முதன்முறையாக ‘கியூஆர் கோடு’ ஸ்கேன் மூலம் போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் திட்டம் மதுரையில் தொடங்கப்பட்டது.

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக போலீஸார் ரசீது வழங்கி அபராதம் வசூலிப்பது வழக்கம். பின்னர் ஆன்லைன் மூலமும் (கிரெடிட், டெபிட் கார்டு), இ-சேவை மையங்கள், தபால் நிலையங்கள் மூலமும் அபராதம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது முதல்முறையாக ‘கியூ ஆர் கோடு’ (QR Code) ஸ்கேன் முறையில் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை மதுரை மாநகர் போக்குவரத்து பிரிவு தொடங்கி உள்ளது. தமிழகத்தின் எந்த பகுதியில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டாலும் அதற்கான அபராதத்தை கியூஆர் கோட் (G-Pay, Phonepay, Paytm) மூலம் செலுத்தலாம். இதுகுறித்து தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி உள்ளிட்ட போலீஸார் விழிப் புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

போக்குவரத்து உதவி ஆணை யர் மாரியப்பன் கூறுகையில், இத்திட்டத்தால் கால விரயம் தவிர்க்கப்படும். அபராதத் தொகையை எளிதாக செலுத்த முடியும் என்றார்.

SCROLL FOR NEXT