தமிழக அரசு சார்பில் ரூ.29 கோடியே 10 லட்சத்தில் கட்டப்பட் டுள்ள மதுரை உலகத் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகம், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் மற்றும் ஒண்டிவீரன் மணி மண்டபம் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சிறப்பாக செயல்பட, மதுரை தல்லாகுளத்தில் 14.15 ஏக்கரில் 87,300 சதுர அடி பரப்பில், 2 தளங்களுடன் ரூ.25 கோடியில், 400 பேர் அமரக்கூடிய கலையரங்கம், வகுப்பறைகள், விருந்தினர் தங்கும் அறைகளுடன், பெருந்திட்ட வளா கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தில் ரூ.3 கோடியே 46 லட்சத் தில் பழந்தமிழர்களின் சிறப்புகளை யெல்லாம் நாட்டுக்கு எடுத்துக் காட்டும் வகையில், சுடுமண் சிற்பம், சுதைச் சிற்பம் மற்றும் மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள் ளது.
ஒண்டிவீரன் மணிமண்டபம்
மேலும், நெல்லை சீமையில் வெள்ளையரை எதிர்த்து போரிட்ட பூலித்தேவனின் முதன்மை படைத் தலைவராக இருந்து நெற்கட்டும் செவல் பாளையம் மற்றும் வெள் ளையருக்கு எதிரான பல போர் களிலும் பங்கேற்று, பூலித்தேவன் மறைவுக்குப் பின்னும் விடுதலைப் போரை தொடர்ந்து நடத்தி உயிர்த் தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன்.
இவரது நினைவைப் போற்றும் வகையில் திருநெல் வேலி மாவட்டம், பாளையங் கோட்டையில் ரூ.64 லட்சத்தில் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.29 கோடியே 10 லட்சம் மதிப்பிலான மதுரை உலகத் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகம், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் மற்றும் ஒண்டிவீரன் மணிமண்டபம் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள், முக்கூர் என்.சுப்பிரமணியன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி, தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன், தகவல் தொழில் நுட்பவியல் செயலர் தா.கி.ராமச் சந்திரன், செய்தித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன், செய்தித்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.