பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

மேட்டூர் அணை நீர்வரத்து 9,007  கன அடியாக குறைந்தது

எஸ்.விஜயகுமார்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10,164 கன அடியிலிருந்து, விநாடிக்கு 9,007 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று (செப். 29) விநாடிக்கு 10 ஆயிரத்து 164 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, இன்று (செப். 30) காலை நிலவரப்படி விநாடிக்கு 9,007 கன அடியாக நீர்வரத்து குறைந்து இருந்தது.

அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக விநாடிக்கு 12,000 கனஅடி வீதமும் மேட்டூர் அணை கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 800 கனஅடி வீதமும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது .
நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.44 அடியில் இருந்து, இன்று 73.06 அடியாக குறைந்தது.

SCROLL FOR NEXT