தமிழகம்

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக நீர்நிலைகளைத் தேடி அலையும் உள்நாட்டுப் பறவைகள்

அ.அருள்தாசன்

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்கவும், நீர்நிலைகளைத் தேடியும் தென்மாவட்டங்களில் பல கி.மீ. தொலைவுக்கு உள்நாட்டுப் பறவைகள் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குளங் களில் தற்போது பெருமளவில் உள் நாட்டுப் பறவைகளை காணமுடி கிறது.

வற்றாத ஜீவநதியான தாமிர பரணி மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான அவற்றின் பாசன கால் வாய்கள், குளங்கள் ஆகியவை திருநெல்வேலி மற்றும் தூத்துக் குடி மாவட்டங்களின் விளை நிலங்களைச் செழுமைப்படுத்துகின்றன. அத்துடன் ஆயிரக்கணக்கான பறவைகளுக்கும் வாழ்வாதாரமாக உள்ளன. தாமிரபரணி பாசன குளங்களில் சுமார் 90 வகையான நீர்வாழ் பறவைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வேற்று தேசங் களிலிருந்து வலசை வருபவை.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், திருப்புடைமருதூர் பறவைகள் காப்பகம், வாகைக் குளம் பறவைகள் வாழ்விடம் மற் றும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள கடம்ப குளம், பெருங்குளம், கருங்குளம் போன்ற குளங்கள் எண்ணற்ற பறவைகளை கவர்ந்திழுக்கின்றன.

30,000 பறவைகள்

பறவைகளின் வாழ்விடங்களான நீர்நிலைகளைப் பாதுகாப்பது தொடர்பாக உள்ளூர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஆண்டொன்றுக்கு சராசரியாக 90 இனங்களைச் சேர்ந்த 30,000 பறவைகள் பதிவு செய்யப்பட் டுள்ளன.

கடந்த ஆண்டு இறுதியில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட் டங்களில் பெய்த மழையால், குளங்கள் நிரம்பி வழிந்தன. இதனால் பறவைகள் வருகையும் அதிகமாக இருந்தது.

பறவைகள் இடம்பெயர்வு

தற்போது கடும் வெயில் கார ணமாக எங்கெல்லாம் நீர்நிலைகள் அதிகம் உள்ளதோ அங்கெல்லாம் பறவைகள் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உள்நாட்டுப் பறவைகள் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குளங்கள், அணைப் பகுதிகளில் அதிக அளவில் இடம்பெயர்ந்து வந்துள்ளதாக மணிமுத்தாறு அகத் தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்பு மையத்தின் கள ஒருங் கிணைப்பாளர் மு.மதிவாணன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து வந்து, குளங்கள், நீர்நிலைகளில் தங்கியிருந்த பறவைகள் கடந்த மார்ச் முதல் வாரத்திலேயே இங்கிருந்து தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றுவிட்டன. கூந்தன் குளம் உள்ளிட்ட பறவைகள் வாழி டங்களில் இப்போது வெளிநாட்டுப் பறவைகள் ஏதும் இல்லை.

அதேநேரத்தில் உள்நாட்டுப் பறவைகள் அதிகமாக வந்துள்ளன. கோடையில் உள்நாட்டுப் பறவை கள் எங்கெல்லாம் நீர்நிலைகளில் தண்ணீர் இருக்கிறதோ அங்கெல்லாம் இடம்பெயர்ந்து சென்றுவிடும். தென்மாவட்டங்களில் பறவைகள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற் றொரு மாவட்டத்துக்கு பல கி.மீ. தொலைவுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் இல்லை என்றால் அருகில் உள்ள தூத்துக் குடி, திருநெல்வேலி மாவட்டத் துக்கு பறவைகள் வந்து விடு கின்றன. இங்குள்ள குளங்களில் நீர் வற்றிவிட்டால், அவை அணைப் பகுதிகளுக்கு இடம் பெயரும்.

உள்நாட்டுப் பறவைகள்

சங்குவளை நாரை, சாம்பல் நாரை, அரிவாள் மூக்கன், கருந் தலை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நீர் காகங்கள், பாம்பு தாரா, நீர் கோழிகள், 3 வகையான மீன் கொத்தி கள், ஜம்பு கோழி, வாத்துவகை கள், பெரிய தாரா, புள்ளிமூக்கு தாரா, கூழைக்கடா என்று ஏராள மான உள்நாட்டுப் பறவை இனங் கள் தற்போது பல்வேறு நீர் நிலைகளுக்கும் இடம்பெயர்ந் துள்ளன.

இந்த நீர்நிலைகளில் புழு, நத்தை, மீன்கள் போன்ற இரைகளை உண்டு பசியாறுகின் றன. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நீர்நிலைகளி லும், அதையொட்டிய மரங்களிலும் இவை தஞ்சம் அடைந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT