தமிழகம்

கட்டுமான இயந்திரங்களை இயக்க ஆட்கள் பற்றாக்குறை: நாடு முழுவதும் 20 லட்சம் பணியாளர்கள் தேவை - இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க ஆலோசிப்பதாக மத்திய அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

இருங்காட்டு கோட்டையில் இயங்கி வரும் கட்டுமான இயந்திரங்களின் உதிரிபாக உற்பத்தி தனியார் தொழிற்சாலையில் மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி ஆய்வு மேற்கொண்டார். கட்டுமான இயந்திரங்களை கையாள்வதில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால், தனியார் நிறுவனத்துடன் இணைந்து கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பெரும் புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டையில் தனியார் கட்டு மான இயந்திர உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில், கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை இயக்குவதற்காக, இளைஞர்களுக்கு பயிற்சி அளிக் கப்பட்டு வருகிறது. பயிற்சியின் முடிவில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி நேற்று தொழிற்சாலைக்கு வந்தார். தொழிற்சாலையில் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை இயக்க, நம் நாட்டுக்கு மட்டும் 20 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகிறார் கள். இந்தியாவில் தயாரிக்கப்படும் கட்டுமான பணிக்கான இயந்திரம் மற்றும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயந் திரங்கள் ஆகியவற்றை கையாள ஆட்கள் பற்றாக்குறை உள்ளது.

கிராமப் பகுதியில் வேலைவாய்ப்பின்றி உள்ள இளைஞர்களை இந்த பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். அதனால், தனியார் தொழிற் சாலையில் அளிக்கப்படும் மேற் கண்ட பணிகள் தொடர்பான பயிற்சி வகுப்புகளை நேரில் ஆய்வு செய்தேன். தனியார் தொழிற் சாலையில் பயிற்சி வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே பயிற்சி வகுப்புகளை, தனியார் தொழிற்சாலையுடன் இணைந்து கட்டணமின்றி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT