விழுப்புரம் அருகே நரையூர் கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 
தமிழகம்

தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகள் அவசியம்: விழுப்புரம் அருகே அமைச்சர் அன்பில் மகேஸ் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகள் முக்கியம் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் அருகே வளவனூரை அடுத்த நரையூர் கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:

திமுக அறிவித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என்று அறிவித்து அதனை முதல்வர் நிறைவேற்றினார். வாக்களித்த உங்களின் தேவையறிந்து நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே உங்களின் பிரச்சினைகளை அறியவே நேரில் வருகிறோம். இனியும் வருவோம். உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக பயந்தது. உங்களின் தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகள் முக்கியமாகும் என்றார்.விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன், திமுகஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி உள்ளிட்டோர் உடனிருந் தனர்.

SCROLL FOR NEXT