சென்னை மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினருக்கு அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் தொலைபேசி எண்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பறக்கும்படை, ஒரு நிலைக்குழு, ஒரு வீடியோ பதிவுக் குழு என மொத்தம் 48 குழுக்கள் நியமிக் கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் நியமிக்கப் பட்ட 48 குழுக்களில் உள்ளவர்களும் முறையாக செயல்படுகின்றனரா? என்பதைக் கண்காணிக்க இவர் களின் வாகனங்களில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ‘ஜிபிஎஸ்’ கருவிகள் பொருத்தப்பட் டுள்ளன.
கட்டுப்பாட்டு அறை
ரிப்பன் மாளிகையில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 4 கணினி வசதியுடன் கூடிய பெரிய தொலைக்காட்சிப் பெட்டிகள் அமைக்கப்பட்டு, ‘ஜிபிஎஸ்’ கருவி பொருத்தப்பட்டுள்ள வாகனங் களின் நகர்வு கண்காணிக்கப்படு கிறது. ஒவ்வொரு கணினியின் மூலம் 4 தொகுதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு குழுவினரின் வாக னங்கள் எந்தப் பகுதியில் செல் கின்றன?, அவர்கள் மேற்கொள்ளும் பணியின் தன்மை என்ன?, செல் லும் பகுதியில் ஏற்படும் பிரச் சினைகள் போன்ற விவரங்கள் கண்காணிக்கப்படுவதோடு தகவல் கள் சேகரிக்கப்பட்டு மாவட்ட தேர் தல் அலுவலருக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படுகிறது.
‘கார்ட்லஸ் மைக்’ வசதி
இதற்காக ஒவ்வொரு வாகனத் திலும் ‘கார்ட்லஸ் மைக்’ வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை துணை ஆணையர்கள், 16 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி ஆணையர்கள், செயற் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள் ஆகியோருக்கும் மற்றும் 48 வாகனங்களுக்கும் ‘கார்ட்லஸ்’ மைக் வழங்கப்பட்டுள் ளன.
அனைத்து நட வடிக்கைகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நாள்தோறும் கண்காணித்து வரு கின்றனர்.
சென்னை மாநகராட்சியின் தேர்தல் பிரிவு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.